கோவையில் கத்தி காட்டி 8 செல்போன்கள் பறிப்பு: கல்லூரி மாணவர்கள் 3 பேர் உட்பட 6 பேர் கைது!

கத்தி காட்டி மிரட்டி மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிக்கப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-10-26 14:46 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே தனியார் கல்லூரியில் படிக்கும் சைமன் மற்றும் நண்பர்கள் தங்கி இருந்த அறைக்குள், அதே கல்லூரியைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் இரவு நேரத்தில் நுழைந்து கத்தி காட்டி மிரட்டி 8 செல்போன்களையும், அவற்றின் பாஸ்வேர்டுகளையும் பறித்துச் சென்றனர். புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சுபாஷ்கண்ணன், பிரவீன்சந்தோஷ், மகேஷ் ஆகிய மூன்று மாணவர்களையும், 17 வயது சிறுவர்கள் மூவரையும் கைது செய்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Similar News