நாமக்கல் மனவளக்கலை மன்ற அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ பெத்தண்ண சுவாமிகள் 80 வது குரு ஆராதனை
நாமக்கல் மனவளக்கலை மன்ற அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ பெத்தண்ண சுவாமிகள் 80 வது குரு ஆராதனை;
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலய முன்னாள் மாணவர்கள் சங்கம், நாமக்கல் மனவளக்கலை மன்ற அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் உழவாரப்பணி மற்றும் ஸ்ரீ பெத்தண்ண சுவாமிகள் 80 வது குரு ஆராதனை இராசிபுரம் : கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை, நாமக்கல் மனவளக்கலை மன்ற அப்பர் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஆனந்த ஆஸ்ரமம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள பெத்தண்ண சுவாமிகளின் 80 வது குரு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து வித்யாலய முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். கோவை இராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் இன்ஜினியர் மாணிக்கம் தலைமை வகித்தார். கிரீன் பார்க் பள்ளி இயக்குனர் ஆன்மிக பைங்கொழுந்து முனைவர் எஸ் .குருவாயூரப்பன் “இரண்டெழுத்து மந்திரம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். கோவை இராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளர் அருணாச்சலம், மனவளக்கலை மன்றத்தின் சேலம் மண்டலத் தலைவர் உழவன் மா. தங்கவேலு, நாமக்கல் மனவளக்கலை மன்ற செயலாளர் சுப்பிரமணி, இராசிபுரம் மனவளக்கலை மன்ற தலைவர் கை. கந்தசாமி, விஷ்வ ஹிந்து பரிஷத் நாமக்கல் மாவட்ட தலைவர் எஸ். பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆன்மீகப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.