திண்டுக்கல்லில் தனியார் நகை அடகு கடையில் நூதன முறையில் ரூ.80,000 மோசடி - வாலிபர் கைது
Dindigul;
திண்டுக்கல் ஸ்கீம் ரோடு பகுதியில் உள்ள தனியார் அடகு கடையில் வேடசந்தூர் சேர்ந்த நாகராஜ் மகன் குமார்(23) என்பவர் தனது நகை மற்றொரு தனியார் நகை அடகு கடையில் ரூ.80 ஆயிரத்திற்கு அடமானம் வைத்திருப்பதாகவும் நகையை திருப்பி உங்கள் அடகு கடையில் வைக்க வேண்டும் என்று கூறி ரூ.80 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு நகை திருப்பி கொண்டு வராமல் மோசடி செய்ததாக தனியார் நகை அடகு கடையில் ஊழியர் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி நூதன மோசடியில் ஈடுபட்ட குமாரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்