ஓசூர்: 90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை. புத்தகங்கள் விற்பனை.
ஓசூர்: 90 லட்சம் ரூபாய்க்கு விற்பனை. புத்தகங்கள் விற்பனை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஓசூர் மூக்கண்டபள்ளியில் 14-வது ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி அன்று தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. இதில் மொத்தம் 100 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்திருந்த நிலையில் மொத்தம் சுமார் ரூ.90 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.