ரூ.ஒன்னரை கோடி மோசடி புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் காத்திருக்கும் போராட்டம்-CPM தண்டபாணி பேட்டி.
ரூ.ஒன்னரை கோடி மோசடி புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் காத்திருக்கும் போராட்டம்-CPM தண்டபாணி பேட்டி.
ரூ.ஒன்னரை கோடி மோசடி புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் காத்திருக்கும் போராட்டம்-CPM தண்டபாணி பேட்டி. கரூர் மாவட்டம், தரகம்பட்டி பகுதியில் செயல்பட்ட ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் & ஸ்ரீ முருகா சிட்ஸ் நிறுவனத்ததினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம், ஏல சீட்டு நிறுவனம் நடத்துவதாக கூறி கடந்த ஒரு வருடமாக வசூலித்து வந்த பணத்தை சுருட்டிக் கொண்டு நிறுவனத்தை இழுத்து மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த சிபிஎம் கரூர் மாநகர செயலாளர் தண்டபாணி, இன்றைய காலசூழலில் 100 நாள் வேலைக்கு சென்று தங்கள் உழைப்பில் சேமித்த பணத்தை குடும்ப நலன் கருதி சிட்பன்ட் நிறுவனத்தில் இணைந்து பணம் செலுத்தினர். சுமார் 250க்கும் மேற்பட்டோரிடம் ரூ ஒன்னரை கோடி வரை சிட்பன்ட் நிறுவனம் மோசடி செய்துள்ளது. கடந்த வாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரில், அவர் உத்தரவிட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட சிட்பன்ட் நிறுவனம் மீதும், நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால்,வரும் புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தார்.