கேத்தாண்டபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் MLA பங்கேற்பு
கேத்தாண்டபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் MLA பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் கேத்தண்டப்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று வழங்கினார் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், கேத்தாண்டபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 11 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சிகளில் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய நிர்வாகிகள் எழிலரசிகுமார், திருப்பதி, ஊராட்சிமன்ற தலைவர்கள் திருப்பதி, ஜெயலட்சுமிசுரேஷ் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.