ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற எருது விடும் விழாவினை MLA துவக்கி வைத்தார்

சந்திர புரம் பகுதியில் மாபெரும் எருது விடும் விழா நடைபெற்றது;

Update: 2025-05-28 05:25 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஊர் பொதுமக்கள் சார்பில் நடை பெற்று வரும் எருது விடும் விழாவினை சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்! திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், சந்திரபுரம் கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எருது விடும் விழாவினை கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த எருது விடும் விழாவில் வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிகளில் இருந்து சுமார் 250 கும் மேற்ப்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டு விழாவில் சீறி பாய்ந்து ஓடின இந்த நிழ்ச்சியில் 100 கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அதிக தூரத்தை குறைந்த வினாடியில் ஓடி சென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் சுமார் ஐயிந்து ஆயிரத்திற்கும் பெறப்பட்ட பார்வையாளர்கள் மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிங்காரவேலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, மாணவரணி புகழேந்தி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அரசு மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Similar News