கோவையில் MSME ஏற்றுமதி வணிக மேம்பாட்டு கருத்தரங்கு !
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ஏற்றுமதி வழிகாட்டி கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.;
கோவை ஆவாரம்பாளையம் கோ-இந்தியா கூட்டரங்கில், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சார்பில் ஏற்றுமதி வணிக மேம்பாட்டு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில், தயாரிப்பு பொருட்கள் ஆவணப்படுத்தல், சந்தைப்படுத்தல், வெளிநாட்டு சந்தைகளில் வாய்ப்புகள், மத்திய அரசு திட்டங்கள், INCO விதிமுறைகள், FTP திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், டிஜிஎஃப்டி இணை அதிகாரி ஆனந்த் மோகன் மிஸ்ரா, MSME இணை இயக்குனர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.