மல்லூர் வீ.ஜீவிகாஸ் பப்ளிக் பள்ளியில் "இலவச NEET பயிற்சி" தொடக்கவிழா...
மல்லூர் வீ.ஜீவிகாஸ் பப்ளிக் பள்ளியில் "இலவச NEET பயிற்சி" தொடக்கவிழா...;
மல்லூர் வீ.ஜீ விகாஸ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் 14.09.25 ஞாயிற்றுக்கிழமை VG NEET CLASSES சிறப்புப் பூஜையுடன் இனிதே தொடங்கப்பட்டது. இவ்வகுப்பில் கல்வியில் முதலிடம் பெற்றிருந்தும் போதிய கல்விக்கட்டணம் செலுத்த முடியாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் உதவும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் NEET CLASSES இலவசமாகக் கற்றுக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இப்பயிற்சிக்கு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் கற்பிக்க முறையே சின்னமுத்து, மோகன்குமார், ரமேஷ் ஆகிய பாட நிபுணர்கள் ஆலோசகர்களாக உள்ளனர்.இயற்பியல் ஆசிரியர் சின்னமுத்து பேசும் பொழுது 7.5 திட்டம் குறித்த பயன்களையும் NEET CLASS ன் தேவை குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். இத்தகைய சிறப்பு முயற்சியில் வீ. ஜீ.விகாஸ் பப்ளிக் பள்ளியுடன் ஹெரிடேஜ் வித்யாலயா,வாகீஸ்வரி வித்யாலயா,இந்தியன் பப்ளிக் மற்றும் இந்தியன் மெட்ரிக் பள்ளிகளும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளனர். இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்கள் NEET தேர்வில் வெற்றி பெற பள்ளி முதன்மைசெயல் அலுவலர் திருநாவுக்கரசு மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார்.பள்ளி முதல்வர் விஜயகுமார் இனிவரும் காலங்களில் நீட் தேர்வின் இன்றியமையாமை மற்றும் தேர்வில் வெற்றி பெறத் தேவையான யுத்திகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைவர் பெ. ந. பழனிச்சாமி, செயலாளர் திரு. ராமச்சந்திரன், இணைச்செயலாளர் திரு.கார்த்திகேயன், பொருளாளர் துரைசாமி, பள்ளித்தாளாளர் செல்லமுத்து,நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திரளான மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.