கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை நிறுத்தம் குறித்த அறிவிப்பு-PRO

கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை நிறுத்தம் குறித்த அறிவிப்பு-PRO;

Update: 2025-04-25 14:04 GMT
கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை நிறுத்தம் குறித்த அறிவிப்பு-PRO மதுரை கோட்டத்தின் கொடைக்கானல் சாலை - வாடிப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு ரயில் சேவை குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்டை ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்.42 / 2025-26  ·          கோவை சந்திப்பிலிருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் (திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாக) எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 26 & 29, 2025 அன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் குறுகிய நேரத்திற்கு நிறுத்தப்படும் (2 நாட்கள்). ·        இந்த ரயில் கோவை சந்திப்பிலிருந்து திண்டுக்கல் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் திண்டுக்கல் சந்திப்பு முதல் நாகர்கோவில் சந்திப்பு வரை இயக்கப்படாது என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News