மன்னார்குடி பைக் திருடன் முயன்ற நபர் VIDEO

நள்ளிரவில் வேட்டி சட்டையில் மாஸ்க் அணிந்து கொண்டு பைக் திருட சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய திருடன்;

Update: 2025-06-13 09:48 GMT
மன்னார்குடி தஞ்சை சாலையில் நடராஜ பிள்ளை தெருவில் வசித்து வருபவர் சத்யராஜ்.இவர் நேற்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்த போது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் ஒன்றின் பூட்டு திறக்கப்பட்டிருந்து கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டு வாசலில் பொறுத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது சத்யராஜ் குடும்பத்தினர் மேலும் அதிச்சியடைந்தனர். கடந்த 11 ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் வேட்டி சட்டையில் முகத்தில் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் உள்ளே வருகிறார். அங்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்வதற்காக வாகனத்தின் Handled Girl ஐ பிடித்து பல முறை பலமாக அசைத்தும் இருசக்கர வாகனத்தின் side லாக் க்கை உடைத்து வண்டியை எடுத்து செல்ல முயன்றார்.அப்போது வாகனத்திலிருந்து முன் பாக்க சக்கரத்துடன் சேர்ந்து சங்கிலி மூலம் பூட்டு போடப்பட்டிருந்ததால் அதை திறக்க அந்த மர்ம நபர் தன்னிடம் இருந்த பல வகையான சாவிகளை எடுத்து திறக்க முயன்றும் முடியவில்லை. பின்னர் அருகில் நிறுத்தி இருந்த ஸ்கூட்டரின் பூட்டை உடைத்து திருட முயன்றும் முடியாததால் ஏமாற்றத்துடன் அந்த நபர் திருப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சத்யராஜ் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Similar News