1½ கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
பல்லடத்தில் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;
பல்லடம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பல்லடம்-மாணிக்காபுரம் ரோடு ஜே.கே.ஜே. காலனியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் பல்லடம்- மங்கலம் ரோட்டை சேர்ந்த மணிரத்னம் (வயது 27) என்பதும் விற்பனைக்காக 1½ கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.