10 வெள்ளாடுகளை திருடி மினி ஆட்டோவில் கடத்தல்.
ஆரணி அடுத்த சேவூரில் புதன்கிழமை நள்ளிரவில் பத்து ஆடுகளை திருடி மினி ஆட்டோவில் கடத்திச்சென்றது தெரியவந்தது.
ஆரணி அடுத்த சேவூர் சிறுமூர் சாலையில் உள்ள விவசாயி பாஸ்கரன் என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார் . இந்நிலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை நேரத்தில் ஆட்டுபட்டியில் அடைத்து வைத்தனர். செம்மறி ஆடுகள் ஒரு பட்டியிலும், 10 வெள்ளாடுகளை ஒரு பட்டியிலும் வைத்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் 10 வெள்ளாடுகள் கொண்ட பட்டியில் தடுப்பு பலகையை உடைத்து மினிஆட்டோவில் 10 வெள்ளாடுகளை கடத்திச்சென்றனர். இது குறித்து ஆரணி கிராமிய போலீஸில் விவசாயி பாஸ்கரன் புகார் கொடுத்ததின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆங்காங்கா உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டியிலிருந்து மினிஆட்டோவில் ஏற்றிச்சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து சுற்றிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.