கனமழையால் 10 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழப்பு
செய்யூர் அருகே வேம்பனுாரில் கனமழை காரணமாக, கோழிப்பண்ணைகளுக்குள் மழைநீர் புகுந்ததால், தண்ணீரில் மூழ்கி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேருராட்சிக்கு உட்பட்ட வேம்பனுார் கிராமத்தில் பல்வேறு தனியார் கோழிப்பண்ணைகள் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, பல கோழிப்பண்ணைகளுக்கு உள்ளே மழைநீர் புகுந்ததால், தண்ணீரில் மூழ்கி, அப்பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தது.
கோழி குஞ்சு,தீவணம்,தடுப்பூசி,தேங்காய்ப்பஞ்சி,வேலை ஆட்கள் கூலி என சுமார் 20 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதேபோல இப்பகுதியில் பல்வேறு கோழிப்பண்ணைகளில் தண்ணீர் புகுந்து ஏராளமான கோழி குஞ்சுகள் உயிரிழந்தது அப்பகுதி கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.