100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய விடுதலை மற்றும் அரசியலமைப்பு சட்டம் குறித்து இழிவாக பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1947 இல் இந்தியா உண்மையாக சுதந்திரம் பெறவில்லை என்றும், இதனால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் செல்லாது என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் திண்டுக்கல் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாநகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மையினர் பிரிவு காங்கிரஸ் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும், இந்திய சுதந்திரத்தை குறித்து இழிவாக பேசிய மோகன் பகவத்தை கைது செய்ய வேண்டும் என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.