100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க கோரி அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்;
100 நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க கோரி அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் அருகே உள்ள கூணங்கரணை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் 100 நாள் வேலை செய்து வந்துள்ளனர் இவர்களுக்கு முழுமையாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை 20 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டதாகவும் அதனால் எங்களுக்கு முழுமையாக 100 நாள் பணி வழங்க வேண்டும் என கூறி அச்சுறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அச்சிறுப்பாக்கம் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உங்களுக்கு முறையாக 100 நாள் வேலை திட்டம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் முற்றுகைப் போராட்டமானது கைவிடப்பட்டது.