100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயர்த்தியதை ஒண்ணுபுரம் கிராம மக்களிடையே பாஜகவினர் பிரச்சாரம்
ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தினை 125 நாளாக உயர்த்தியதை அப்பகுதி மக்களிடையே பாஜக சார்பில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்த மத்திய நலத்திட்ட பிரிவு மாநிலசெயலாளர் சைதை வ.சங்கர்.;
ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தினை 125 நாளாக உயர்த்தியதை அப்பகுதி மக்களிடையே பாஜக சார்பில் எடுத்துரைத்து பிரச்சாரம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி ஒன்றியம், ஒண்ண்புரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தினை 125 நாளாக உயர்த்திய பாரத பிரதமர் மோடி வளர்ச்சி அடைந்த இந்தியா- வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டம் 2025 குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நெசவாளர் அணி இணை அமைப்பாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மேலும் இதில் மத்திய நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர், பிரச்சார பிரிவு மாநில பொறுப்பாளர் நித்தியானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு மாநில பொறுப்பாளர் திருஞானசம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலமேலு, சிறுபான்மை பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளர் ராஜ்குமார், ஆரணி நகர தலைவர் மாதவன், மாவட்ட பிரச்சார பிரிவு சேர்ந்த தண்டபாணி, வடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஒன்றியத்தைச் சார்ந்த முத்துவேல் நன்றி கூறினார்