100 சதவீத வாக்குப்பதிவு - கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த ஆட்சியர்
நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தார்.
Update: 2024-03-20 02:33 GMT
நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நாடாளுமன்ற தேர்தலில்100/சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடையே வாக்காளர் பலூன் பறக்கவிட்டு விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சாரத்தை மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் மோனிகா ரானா , மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் ,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் ஆட்சியரக அலுவலர்கள். பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு உறுதிமொழியேற்றனர்