100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு.;
Update: 2024-03-22 09:40 GMT
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் பகுதியில் களஞ்சியம் கலைக்குழு சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் படி பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. களஞ்சியம் அறக்கட்டளை சார்பில் 15 பேர் கொண்ட கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டு உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் தினமும் காலை முதல் இரவு வரை நடத்தப்படுகிறது. இது தவிர முதல் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் உறுதி மொழி பதாகையில் கையொப்பமிடும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது என்றார். இதில் சேலம் மாநகராட்சி துணை ஆணையாளர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி ஆணையாளர் வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.