ஸ்ரீ1008 மகாவீரர் ஜிநாலயத்தில் 2551ஆம் ஆண்டு மகாவீரர் மோட்ச கல்யாணம்.

ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ1008 மகாவீரர் ஜிநாலயத்தில் 2551ஆம் ஆண்டு மகாவீரர் மோட்ச கல்யாணம் நடைபெற்றது.;

Update: 2024-11-03 06:24 GMT
ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ1008 மகாவீரர் ஜிநாலயத்தில் 2551ஆம் ஆண்டு மகாவீரர் மோட்ச கல்யாணம் நடைபெற்றது. மகாவீரர் மோட்சமடைந்த தினத்தில் தீப விளக்கேற்றி ஜைனர்கள் தீபாவளியாக வழிபட்டு வருகின்றனர். தீபாவளி முன்னிட்டு ஆரணி புதுக்காமூர் ஸ்ரீ1008 மகாவீரர் ஜிநாலயத்தில் 2551ஆம் ஆண்டு மகாவீரர் மோட்ச கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. அதையொட்டி பகவான் மகாவீரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் சுவாமி திருவீதி உலா சென்றது. மேலும் ஜைனர்கள் வீதி உலாவில் பாட்டு பாடி நடனமாடியபடி சென்றனர். மேலும் ஊர்வலத்தில் புதுக்காமூர் ஜைனர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன் பூரண கலசம் வைத்து ஆரத்தி எடுத்து புண்ணியம் பெற்றனர்.

Similar News