ரத்தினகிரி கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால்குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-03-25 07:24 GMT

பால்குட ஊர்வலம்

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி 1,008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக காலையில் விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம் மற்றும் 1,008 பால்குடம் நிறுவப்பட்டு கந்த யாகம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து மலைய டிவாரத்தில் இருந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில் 1,008 பால்குட ஊர்வலம் தொடங்கி மலையை வலம் வந்து மலைமேல் உள்ள மூலவருக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் பக்தர்கள், உபயதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News