தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 1008 சுமங்கலி பூஜை

ராணிப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஐம்பெரும் விழாவில் 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

Update: 2023-12-15 10:19 GMT

ராணிப்பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஐம்பெரும் விழாவில் 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞ ஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர சுவாமிகளின் 63வது ஜெயந்தி விழா மற்றும் தன்வந்திரி பீடத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஐந்து நாட்கள் மஹோத்சவம் 2023 என்ற பெயரில் நடைபெற்றும் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் சகல தேவதா ஹோமத்துடன் 1008 சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது இதில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு பீடாதிபதி டாக்டர் முரளீதர சுவாமிகள் சேலை மற்றும் மங்களப் பொருட்களுடன் பிரசாதம் ஆசி வழங்கினார்..
Tags:    

Similar News