108 சங்காபிஷேகம்

செல்வவிநாயகர் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா 108 சங்காபிஷேகம்

Update: 2024-10-25 10:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி அடுத்த பெரணமல்லூர் மோட்சவாடி பகுதியில் புனரமைக்கப்பட்ட விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேக விழா கடந்த மாதம் 8ம்தேதி நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் முடிந்த நிலையில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7மணிக்குமேல் கோயில் வளாகத்தில் ஆனந்தன் சிவாச்சாரியார் முன்னிலையில் யாகசாலை அமைக்கப்பட்டு நவகலசம் அமைத்து யாகவேள்வி பூஜை மற்றும் மகாபூர்ணாஹூதி நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாரதனை நடைபெற்றது. விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி இஞ்சிமேடு பெரிய மலை சிவயோகி ஐஆர்.பெருமாள் கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News