14 மது பாட்டில்களுடன் ஒருவர் கைது

அருமனை

Update: 2025-01-09 07:43 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் மது அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக  மது வற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து இன்று காலை 10 மணியளவில் அருமனை காவல் நிலைய எல்லை பகுதிகளில் சட்டவிரோத மது  விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.       அப்போது இரும்பிலி என்ற பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜன் (53)  என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் சோதனை நடத்தியதில் 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அடுத்து மது பாட்டில்களுடன்  அவரை போலீஸ் நிலையத்தில்  கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்த செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News