15வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின ஊர்வலம்

ஆரணியில் 15வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.;

Update: 2025-01-25 09:47 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தின ஊர்வலம் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களைக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர் பெயர் பதிவு செய்தல் வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் பதிவு செய்தல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல் பெயர் நீக்கம் முகவரி மாற்றம்மற்றும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் போன்றவை குறித்து பள்ளி மாணவர்கள் மூலம் பதாகைகள் கொண்டு விழிப்புணர் ஊர்வலம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து காந்தி ரோடு புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.இந்நிகழ்வில் வட்டாட்சியர் கௌரி அனைத்து நிலை வருவாய்த்துறை ஊழியர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News