157 இருசக்கர வாகனங்கள் ஏலம் - திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
திருச்சி மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 157 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 11ம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவித்திருந்தனர்.;
157 இருசக்கர வாகனங்கள் ஏலம்
திருச்சி மாவட்ட காவல்துறையில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 157 இருசக்கர வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது. வருகின்ற 12.01.2024-ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 11.01.2024-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 12.01.2024-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 1000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் 18% சரக்கு மற்றும் சேவை வரியும் சேர்த்து, முழு தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண் குமார், தெரிவித்துள்ளார்.