ரூ.16 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக DRO கைது.
ரூ.16 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக DRO கைது.;
ரூ.16 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக DRO கைது. ரூ.16 கோடி மோசடி வழக்கில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக DRO சூரிய பிரகாஷ் வருகின்ற 11.03.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு. சென்னை மாவட்டம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் நிலம் எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சூரியபிரகாஷ். கடந்த 2016 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார். அப்பொழுது கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் வெளிமாநிலங்களில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஆர்டர்களை பெற்று தருவதாக கூறி 16 கோடி ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு, கரூரில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் விசாரணை மேற்கொண்டு, பணம் வாங்கி ஏமாற்றியது ஆர்டர்களை வாங்கி, தருவதாக கூறி ஏமாற்றிய வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வருகின்ற 11.03.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.