தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 16-வது ஆண்டு விழா

தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 16-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2024-01-22 09:08 GMT

ஆண்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் அருகே உள்ள தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் 16-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் சதீஸ்குமார் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் உளவியல் வாழ்க்கை திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கார்த்திக் வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கை திறனை மேம்படுத்தவும், அறிவுபூர்வமாக சிந்திக்கவும், கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்தும், பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் எவ்வாறு பழகுவது என்பது குறித்து பேசினார்.

விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கல்லூரி இயக்குனர்கள் மாணவ- மாணவிகளை பாராட்டி பேசினர். மேலும் மாணவ-மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணினி துறைத்தலைவர் மோகனபிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News