திடியூர் கல்லூரியில் 16 வது தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்டம், திடியூர் பி.எஸ்.என், பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Update: 2024-02-10 01:56 GMT
திருநெல்வேலி மாவட்டம், திடியூர் பி.எஸ்.என், பொறியியல் கல்லூரியில் 16ஆவது தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கல்லூரியின் கணினி பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு கல்லூரி நிறுவனர் சுயம்பு தலைமை வகித்தார்.இந்த கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர், மாணவிகள், பேராசிரியர்கள் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.