முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றம் உத்தரவு;

Update: 2024-02-16 06:46 GMT

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றம் உத்தரவு

2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றம் உத்தரவு கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர்

அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகார் குறித்து அப்போதைய மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தபோது முன்னாள் முத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் முன்னாள் துணைமேயர் PM மன்னன், திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2019ஆம் ஆண்டுவரை நடைபெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டு முதல் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதில் சிலர் பிறழ்சாட்சியும அளித்திருந்தனர் இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் ,செந்தில்,, பொன்னம்பலம்,, நீதிதேவன், நாகராஜ், மயில்வாகனன், சேகர், தமிழரசன், போஸ், பாலு, ராகவன், பாலகிருஷ்ணன், அய்யனார், வெள்ளையன் உள்ளிட்ட 17 பேர் நேரில் ஆஜராகினர்.

பின்னர் மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி அவர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பை வாசித்தார் இதனையடுத்து மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரும் புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News