2 பேர் கைது

850 கிராம் கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது;

Update: 2025-02-18 06:51 GMT
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த கிரசர் மேடு பகுதியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோபி மதுவிலக்கு போலீசார்,  நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பவானிசாகரைச் சேர்ந்த சிவகுமார் (30) என்பதும் தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, சிவகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.  இதேபோன்று, ஈரோடு ஈ.பி.பி நகர் பஸ் ஸ்டாப்பில், சமூக விரோதிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக,ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சென்னிமலைபாளையம் புதூரைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News