சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் கேசவவர்மன்,43; இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கேசவவர்மனின் தந்தை முனியன், 70; தாய் பொன்னம்மாள், 65; ஆகியோரை கட்டிப்போட்டு மிரட்டி, வீட்டிலிருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, கொள்ளை நடந்த கேசவவர்மனின் வீட்டில் நேரில் ஆய்வு செய்தார்.