2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலை அறிவதற்கான தேர்தல் கரூரில் நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலை அறிவதற்கான தேர்தல் கரூரில் நடைபெற்றது.;

Update: 2025-12-10 08:12 GMT
2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலை அறிவதற்கான தேர்தல் கரூரில் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவ நிலை அறிவதற்கான தேர்தல் இன்று காலை 9 மணி துவங்கி மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றக்கூடிய 78 ஊழியர்கள் இந்த தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் அனைத்து தொழிலாளர் நலச் சங்கம்,தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக அனைத்து பணியாளர் மற்றும் சுமை பணியாளர்கள் பொதுநல சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக பொது தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட எட்டு தொழிற்சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் அறிவதற்கான தேர்தல் நடைபெ நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை நடைபெறும் இந்த தேர்தலில் முடிவுகள் இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News