கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டி

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Update: 2024-03-31 11:29 GMT
பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள்

கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தல் களத்தில் 13 சுயேச்சைகள் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உட்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 25 பேர் 37 வேட்பு மனுக்களை அளித்திருந்தனர். கடந்த 28ம் தேதி நடந்த மனு பரிசீலினையில் அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி மற்றும் சில சுயேட்சை வேட்பாளரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. இதையடுத்து, பிரதான கட்சி வேட்பாளர்களின் கூடுதல் மனுக்கள், மாற்று வேட்பாளரின் மனுக்கள்,

படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்யாத மற்றும் படிவங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 4 சுயேச்சை வேட்பாளரின் மனு என மொத்தமாக 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 21 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுவை வாபஸ் பெறும் தினமான நேற்று, வாபஸ் பெற பிரதான கட்சி வேட்பாளர்கள்,

சுயேச்சைகள் யாரும் வரவில்லை. இதனால், கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தல் களத்தில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியானது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமார் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு பணி நடந்தது.

Tags:    

Similar News