23வது வார்டு பகவத்சிங் தெருவில் ஓடை மண் அகற்றம்
23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட பகவத்சிங் தெருவில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து இன்று (ஜூலை 20) மாமன்ற உறுப்பினர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் ஓடை மண் தூய்மை பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி பார்வையிட்டு துரிதப்படுத்தினார்.