25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு
எரியோடு அரசு பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோட்டில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்த மாணவ மாணவிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். அனைவரும் ஒருங்கிணைந்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு 61 ஆயிரத்து 500 மதிப்பிலான டேபிள் சேர்களை வழங்கினர். பின்பு மதியம் அனைவரும் ஒன்றாக விருந்து சாப்பிட்டனர். மாலை அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் மீண்டும் இதே பள்ளியில் சந்திப்போம் என விடை பெற்றனர்.