விருதுநகர் தொகுதியில் 27 மனுக்கள் ஏற்றிக்கொள்ளப்பட்டது

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Update: 2024-03-28 12:00 GMT
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கிய நிலையில் தாக்கல் நேற்று 27ஆம் தேதி நிறைவடைந்தது. விருதுநகர் நாடாளுமன்ற பொது தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 34 வேட்பாளர்கள் 41 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் பாஜக சார்பாக போட்டியிடும் ராதிகா சரத்குமார் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கௌஷிக் மற்றும் டெல்லி பாஜக மோடி அணி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த வேதா தாமோதரன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேண்டும் என கேட்ட கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த அசோக் குமார் உட்பட 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கரும்புச் சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் மற்றும் அவருக்கு ஆதரவாக யாரும் வேட்பு மனு பரிசீலணையில் கலந்து கொள்ளாத நிலையில் அவருடைய வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டது. பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பாஜக சார்பில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த நடிகர் சரத்குமார் மனு உட்பட 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக வேட்பு மனு பரிசீலனைக்கு வந்த பாஜக அதிமுக வேட்பாளர்கள் முகவர்களை அனுமதிக்க மறுத்ததால் அதிகாரிகளுடன் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகள் நடத்திய சமராச பேச்சு வார்த்தைக்கு பின்னர் இரு கட்சி முகவர்களும் உள்ளே வந்தனர்.

Tags:    

Similar News