பழனி கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

பழனி அருகே சாமிநாதபுரம் பகுதியில் 20 சவரன் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-05-31 07:41 GMT

கைது செய்யப்பட்டவர் 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மே மாதம் ஆறாம் தேதி தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சாமிநாதபுரம் போலீசார் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகைக் கொள்ளையில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் தஞ்சாவூரை சேர்ந்த அஜல் பிரவீன்(19), திருச்சியை சேர்ந்த யாழின்ராஜ்(24), சென்னையை சேர்ந்த விஜயகுமார்(25) ஆகிய மூன்று பேரை கோவையில் வைத்து கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப் பட்ட 20 சவரன் நகைகளை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூவருமே பட்டதாரி என்பதும், மூவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிவந்துள்ளது. மேலும் மூவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News