30லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை

சாலை;

Update: 2025-02-26 03:50 GMT
திருக்கோவில்களை பாதுகாக்கும் நமது திராவிட மாடல் நல்லாட்சியில், பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 1500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் திருக்கோவிலுடைய சுற்றுப்பகுதி சுற்றுப்பாதை மற்றும் மாடவீதி முன்புறம் ரூபாய் 30லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்க கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின் படி ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய குழு பெருந்தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜ் மற்றும் கட்சியினுடைய மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நிர்வாகிகள் ,கிளைச் செயலாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டது, இதில் அரசு அதிகாரிகளும் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர், அதனைத் தொடர்ந்து திருக்கோவில் சுற்று பகுதி சுற்று பாதை மற்றும் மாட வீதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது,இந்த பணிகளை மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர், ஒப்பந்ததாரர் அரியந்தக்கா செல்வகுமார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Similar News