கருப்பாநதி அணையிலிருந்து 350 கன அடி நீா் வெளியேற்றம்
Update: 2023-11-23 03:22 GMT
கருப்பா நதி அணையில் நீர் வெளியேற்றம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி அணையிலிருந்து நேற்று இரவு 350 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் அணைக்கு 350 கன அடி நீா் வரத்து இருந்தது. ஏற்கெனவே, அணை நிரம்பியுள்ள நிலையில் அணைக்கு வரும் 350 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.. அணைப்பகுதியில் மழையின் அளவு அதிகரித்து வருவதாகவும், கால்வாய் பகுதிகளில் இருப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளன.