40 அடி உயர ஏணியில் இருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி

ஸ்ரீபெரும்புதூரில் 40 அடி உயரமுள்ள ஏணியில் இருந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த பெயிண்டர் சபரி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழப்பு;

Update: 2025-02-14 06:29 GMT
சென்னையை சேர்ந்தவர் ஆல்பர்ட் டேனியல், 55, பெயின்டர். ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில், கூரைக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.நேற்று மாலை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், 40 அடி உயரமுள்ள ஏணியின் மீது ஏறி, பெயின்ட் அடித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக, ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Similar News