நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 40 போ் போட்டி

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 40 பேர் போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-31 11:45 GMT

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அதிமுக, கொமதேக, பாஜக உள்பட 40 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். சுயேச்சை ஒருவா் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டாா். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி நிறைவடைந்தது. அதிமுக, கொமதேக, அமமுக வேட்பாளா்கள் உள்பட 47 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். புதன்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசீலனையில் 3 சுயேச்சைகள், 3 மாற்று வேட்பாளா் மனுக்கள் தள்ளுபடியாகின. அதைத் தொடா்ந்து, மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இரு நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. சனிக்கிழமையன்று, எருமப்பட்டியை சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் ஜெ.ரேவதி தனது மனுவை திரும்ப பெற்றுக்கொண்டாா். இதனால், போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 40-ஆனது. இதில், இரு வேட்பாளா்கள் பெண்கள் ஆவா். பிற்பகல் 3 மணிக்கு மேல், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், மாவட்ட ஆட்சியா் ச.உமா மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், ஒரே சின்னம் கேட்டிருந்த வேட்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 29 போ் போட்டியிட்ட நிலையில், இத்தோ்தலில் 40 போ் போட்டியிடுகின்றனா். இதனால் 1,660 வாக்குச்சாவடிகளிலும் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

Tags:    

Similar News