சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில் ரூ.41.25 லட்சம் காணிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் உண்டியலில், 223 கிராம் தங்கம், 967 கிராம் வெள்ளி, ரூ.41லட்சத்து 25 ஆயிரத்து 918 ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.;

Update: 2024-01-10 10:42 GMT

காணிக்கை என்னும் பணி

பெரம்பலூர் அடுத்துள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் பணம் என்னப்படுவது வழக்கம் அதனை தொடர்ந்து உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்க, வெள்ளிகள் ஆகியவற்றை, ஜனவரி 9-ஆம் தேதி இன்று எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், தலைமையில் ஆய்வாளர் தீபா லட்சுமி, கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது இதில் கோவிலில் உள்ள ஏழு உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் 'பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட, 41 லட்சத்து 25 ஆயிரத்து 918 ரூபாய் ரொக்க பணம், மற்றும் 223 கிராம் தங்கம், 967 கிராம் வெள்ளி, டாலர், தினார், உள்ளிட்ட 72 எண்ணிக்கையிலான வெளிநாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றுள்ளது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கிராம ஆன்மிக நண்பர்கள் ஐயப்ப சேவா சங்கத்தினர் பலர் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News