தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பான வேட்டி, சேலை, கரும்பு,அரிசி,சர்க்கரை ஆகியவற்றை திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டிற்கு உட்பட்ட நியாயவிலை கடைகளில் இன்று (ஜனவரி 9) காலை பொதுமக்களுக்கு கவுன்சிலர் ரம்ஜான் அலி வழங்கி சிறப்பித்தார்.