ரூ.5 லட்சம் மதிப்பிலான 45 கிலோ போதை பொருள் பறிமுதல்

45 கிலோ போதை பொருளை மயிலாடுதுறை காவல்துறையினர் விரட்டி பிடித்தனர் மொத்த விற்பனைக்காக கொண்டு சென்ற போது போலீசார் நடவடிக்கை - இருவர் கைது;

Update: 2025-04-24 09:40 GMT
:-  மயிலாடுதுறை அருகே நத்தம் பெட்ரோல் பங்க் பகுதியில் எஸ்.ஐ பிரியங்கா  தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 5 சாக்கு மூட்டைகளுடன் வந்த இரண்டு நபர்களை வழிமறித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது ஐந்து சாக்கு மூட்டைகளில் 45 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட  விமல் பான் மசாலா,குட்கா,  ஹான்ஸ், கூல்லீப் உட்பட 4700 பாக்கெட்டுகள் என ரூ.2 லட்சம் மதிப்பிலானஃ  போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போதைப் பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து இருசக்கர வாகனத்தில் வந்த சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் நகோவிலைச் சேர்ந்த ரமேஷ் (52), திட்டையைச் சேர்ந்த குமரகுரு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையம் கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Similar News