5 கோடி நஷ்ட ஈடு:சாட்டை துரைமுருகனுக்கு வக்கீல் நோட்டீஸ்
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி அனுப்பியுள்ளார் .
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 16:13 GMT
5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியை, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வைக்க ஜமாத் மூலம் பணம் வினியோகம் செய்யப்பட்டதாக யூடியூபர் சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி வீடியோ பதிவு செய்தார்.
வீடியோவில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதாக நவாஸ் கனி சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நோட்டீஸ்க்கு பதில் அளிக்காவிடில் சாட்டை துரைமுருகன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.