5 கிலோ மீட்டர் சிலம்பம் சுற்றி சாதனை
200க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை சிலம்பம் சுழற்றி சாதனை படைத்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-29 11:13 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நியூ வேர்ல்டு சிலம்பம் குழு மற்றும் இடசை சிலம்பம் குழு சார்பாக 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களை கொண்டு ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சிலம்பம் சுழற்றிக் கொண்டே சென்று சாதனை படைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.... சிறிய குழந்தைகள் முதல் மாணவ மாணவிகள் வரை பங்கேற்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று சிலம்பம் சுழற்றிக்கொண்டு சாதனை படைத்த நிகழ்ச்சி நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ்கள் வழங்கியது... குழந்தைகள் முதல் பள்ளி மாணவ மாணவிகள் வரை சாலையில் சிலம்பம் சுழற்றிக்கொண்டை சென்ற காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா, எடப்பாடி நகர கழக செயலாளர் ஏ எம் முருகன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல்களை வழங்கி கௌரவித்தனர் அப்போது நோபல் வேர்ல்டு ரெக்கார்ட் அமைப்பினர் மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.