50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் - பழைய பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் !

சிவானந்தா பள்ளியில் 1975 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்த அன்றைய மாணவ, மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-08-12 07:04 GMT
கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் உள்ள சுவாமி சிவானந்தா பள்ளியில் 1975 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்த அன்றைய மாணவ, மாணவிகள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அவர்கள் தங்களது பழைய நிகழ்வுகள் குறித்து பேசியும் ஆடிப்பாடியும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் உள்ளது சுவாமி சிவானந்தா பள்ளி. இப்பள்ளியில் 1975 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்த அன்றைய மாணவ, மாணவிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு பன்னீர் தூவியும் பள்ளியில் படிக்கும் போது சாப்பிட்ட தேன் மிட்டாய், பருப்பி, கடலை மிட்டாய், கம்மர்கட்டு, சுத்துர மிட்டாய், நெல்லிகாய், நாவல் பழம் உள்ளிட்டவைகள் கொடுத்து வரவேற்றனர். மேலும் அவர்கள் மீது மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த அவர்கள் தங்களது பழைய நிகழ்வுகள் குறித்து பேசி மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் இந்த 50 ஆண்டு காலத்தில் அவர்களின் வளர்ச்சி, குடும்பங்கள் பற்றியும் பேசி மகிழ்ந்தனர். மேலும் இவர்களுடன் அன்று படித்து மறைந்த மாணவ - மாணவிகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பழைய பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

Similar News