500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலை தனி நபர் அபகரிக்க முயற்சி செய்து கோயிலை பூட்டி வைத்ததாக புகார்
புகார்;
தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்து அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வரி வசூல் செய்து பல ஆண்டுகளாக கோயில் திருவிழாவை நடத்தி வருகின்றனர் இந்தநிலையில் தேனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் காளியம்மன் கோயிலை அபகரிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு கோயிலை பூட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் கிராம மக்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ள முடியாததால் ஆத்திரம் அடைந்தனர் இதனால் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் கிராம மக்கள் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர் அம்மன் கோயிலை திறந்து பொதுமக்கள் வழிப்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கையில் சூலாயுத்துடன் அம்மன் வேடத்தில் கிரீடம் அணிந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து அம்மன் பாடல்களை பாடி கோயிலை திறக்க வலியுறுத்தினர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயிலை அபகரிக்க முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுத்து கோயிலை திறந்து மக்கள் வழிப்பட வலியுறுத்தி புகார் மனுவை அளித்தனர்