500 நாட்களை கடந்த காங்கிரஸ் தலைவர் வழக்கு
திருநெல்வேலி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்;
திருநெல்வேலி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 500 நாட்களை கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து தீவிர விசாரணை நடப்பதாக சிபிசிஐடி ஐஜியான அன்பு தகவல் தெரிவித்துள்ளார். விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.